Thursday 25 June 2015

ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் பணி

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் தர மேம்பாடு, சேவைகளில் துரிதம், நவீனமயமாக்கல், கார்கோ வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு இன்டர் நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி மற்றும் நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆகியவற்றை ஒருங்கிணைத்து 1995ல் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., அமைப்பு நிறுவப்பட்டது.
இன்றைய இளைஞர்களின் பெருமைக்குரிய பணியிடங்களில் ஒன்றாக கருதப்படும் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவின் தென்பிராந்தியங்களில் காலியாக உள்ள ஜூனியர் அஸிஸ்டென்ட் காலியிடங்களை நிரப்புவதற்கு ஓ.பி.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம் : தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகள் அடங்கிய தென் பிராந்தியத்தில் மொத்தம் 86 காலியிடங்கள் உள்ளன.
வயது : 30.06.2015 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதைப் பொறுத்தவரை எஸ்.டி., பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவராகவும், ஓ.பி.சி., பிரிவினர் 33 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு 3 வருட காலம் படிக்கக்கூடிய இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிகல், பயர் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பிளஸ்டூ படிப்பை முழு நேரப்படிப்பாக குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 
சிறப்பு முன்னுரிமை: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை படித்தவர்கள், என்.சி.சி., யில் பி சர்டிபிகேட் முடித்தவர்கள், தொழிலக தீயணைப்பில் அனுபவம் பெற்றவர்கள், ஏ.ஏ.ஐ.,யின் பயர் பைட்டிங் பயிற்சி பெற்றவர்கள், நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு கல்லூரியில் சப் ஆபிசர் பயர் படிப்பு முடித்தவர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.
உடல் தகுதி: உயரம் குறைந்த பட்சம் 167 செ.மீ., எடை குறைந்த பட்சம் 57 கிலோ, மார்பளவு குறைந்த பட்சம் 81 செ.மீ., மற்றும் 5 செ.மீ., விரிவடையும் தன்மை போன்றவை தேவை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-க்கான டி.டி.,யை Airports Authority of India என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி அறியும் தேர்வு, டிரைவிங் டெஸ்ட், என்டூரன்ஸ் டெஸ்ட், நேர்காணல். எழுத்துத் தேர்வை மதுரை, ஐதராபாத், கோழிக்கோடு, மைசூர், அகாடி ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Regional Executive Director. 
Airports Authority of India. 
Southern Region. 
Chennai - 600 027.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.07.2015
இணையதள முகவரிwww.aai.aero/employment_news/RECRUITMENT-JUNIOR-ASSISTANT-%28FS%29-SRD-2015_160615.pdf